நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உயிருக்கு எமனாகும் உணவுகள்! வெளியான ரிப்போர்ட்
உங்களுக்கு அடிக்கடி உடம் சரியில்லாமல் போகிறது என்றால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளது என்று அர்த்தம். ஒருவருக்கு உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருந்ததால்தான் நோய் எதிர்ப்பு போராட முடியும். நாம் சாப்பிடும் உணவுகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆனால், சில உணவுகள் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடக்காது.
மாறாக, நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும். அப்படிப்பட்ட சக்தியை குறையும் உணவுகள் எவை என்று பார்ப்போம் -
1. நாம் அதிகமாக சர்க்கரையை சேர்த்துக் கொண்டோம் என்றால், அது நோய் எதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாட்டை அடக்கிவிடும். இதனால், நம் உடல் நோயை எதிர்த்து போராட சிரமப்படும்.
2. சிலர் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவார்கள். இந்த பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஆரோக்கியமற்ற கொழுப்பு, சோடியம், செயற்கை சேர்க்கை இருக்கும். அதனால், இவற்றை நாம் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் வீக்கம் ஏற்படும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்திவிடும்.
3. பெரும்பாலோனார் செயற்கை இனிப்புகளை சாப்பிடுவார்கள். இவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்துவிடும். இனிப்புகள் இல்லாத உணவை உட்கொண்டு வந்தால், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் சமநிலையை சீர் குலைத்துவிடும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவித்துவிடும்.
4. அதிகளவில் ஒருவர் மதுவை குடித்துக்கொண்டு வந்தார் என்றால், அவருடைய உடம்பில் நோய் எதிர்ப்பு செல் பலவீனமடைந்துவிடும். ஊட்டச்சத்து குறைபாட்டையும் வழிவகுத்துவிடும்.
5. வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஒருவர் சாப்பிட்டு வந்தால், அவற்றில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் அதிக அளவு சோடியம் வயிற்றில் உப்பசம் ஏற்படுத்திவிடும். மேலும், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்திவிடும்.
6. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, துரித உணவு, பேக் செய்யப்பட்ட உணவுகளில் அதிகப்படியான சோடியம் நிறைந்திருக்கும். இவற்றை தொடர்ந்து நாம் உட்கொண்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |