காலை வெறும் வயிற்றில் தப்பிதவறி கூட இந்த 7 உணவுகளை சாப்பிடாதீங்க.. மோசமான விளைவுகளை ஏற்படுத்துமாம்!
Digestive problem
Indigestion
Blood cells
6 மாதங்கள் முன்
பொதுவாக காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
அதற்காக காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
- வெறும் வயிற்றில் இருக்கும்போது மிளகாய், பூண்டு மற்றும் இஞ்சி போன்ற காரமான உணவுகளை உண்ண வேண்டாம். காரமான உணவுகள் ஏற்கனவே இருக்கும் செரிமான சிக்கல்களை மேலும் மோசமாக்கும்.
- வெறும் வயிற்றில் இனிப்பு வகைகளை சாப்பிட்டால் இன்சுலின் உற்பத்தியை பாதித்து நீரிழிவு நோயை ஏற்படுத்தும். மேலும் இது உங்கள் வயிற்றில் உள்ள அமிலங்கள் மற்றும் காரங்களின் சமநிலையை சீர்க்குலைக்கின்றன.
- வெறும் வயிற்றில் குளிர்பானங்களை குடிப்பது ஒரு ஆபத்தான விஷயமாகும். இதனால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரித்து வயிறு வீக்கம் ஏற்படும். மேலும் செரிமான பிரச்சனைகள், இதய நோய்கள் உட்பட உடல் உபாதைகளும் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
- வெறும் வயிற்றில் சோடா அல்லது மற்ற இரசாயனம் கலந்த குளிர்பானங்கள் எடுத்துக் கொள்ளும்போது அவை வயிற்றில் இரத்த ஓட்டத்தை குறைக்கின்றன. இதனால் உணவு செரிமானமாவதற்கு தாமதமாகிறது. மேலும் ளி உண்டாவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
- சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்கள் அதிக அமிலத்தன்மை கொண்டுள்ளதால் நெஞ்செரிச்சல், எரிச்சல் மற்றும் பிற இரைப்பை பிரச்சினைகளை ஏற்படுகிறது.
- பச்சைகாய்கறிகளை வெறும் வயிற்றில் எடுக்க கூடாது. காய்கறிகளில் இருக்கும் அதிக அளவிலான நார்ச்சத்து வயிற்றை நிறைத்துவிடும். ஆனால் இது அடி வயிறு வலி, வயிறு இறுக்கிப் பிடித்தல் போன்ற உபாதைகளை உண்டாக்கக்கூடியது.
- காலையில் வெறும் வயிற்றில் காபி குடிக்க கூடாது. இது நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வாயுத்தொல்லை போன்ற வயிற்று உபாதைகள், குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US