அறுவை சிகிச்சைக்கு பிறகு.. இந்த உணவுகளை தொட்டு கூட பார்க்க கூடாதாம்! உஷாரா இருங்க
அறுவை சிகிச்சை சிறியதோ பெரியதோ, அதற்கு பின் நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள் குணமாற்றுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின் நீங்கள் சாப்பிடும் உணவினையும் கவனிக்க வேண்டும்.
அறுவை சிகிச்சையினால் சாப்பிட்ட மருந்துகளால் உங்களுக்கு மலச்சிக்கல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் உடலில் சேரும் மருந்துகளின் வீரியம் விளைவுகளை ஏற்படுத்தாமலிருக்க நார்சத்து கொண்ட அதிக காய், பழங்களை உண்ணுங்கள்.
புரத உணவுகள் காயங்களை விரைவில் ஆற்றும். வீக்கத்தை குறைக்கும். சிகிச்சை நடைப்பெற்ற இடத்தில் திசுக்கள் உருவாக உதவி புரியும். பனீர், சீஸ், பருப்பு வகைகள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், மற்றும் ஆலிவ் என்ணெய்களில் நல்ல கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை வீக்கங்களையும் புண்களையும் ஆற்றும். ஆகவே அவற்றில் சமைப்பதை பழக்கப்படுத்துங்கள். மேலும் எந்த உணவுகளை சாப்பிட கூடாது என்பது குறித்து இந்த வீடியோவில் விரிவாக பார்க்கலாம்..