உடலில் ரத்த உற்பத்தி சரசரவென அதிகரிக்கனுமா? இந்த எளிய வீட்டு உணவுகள் போதும்
ரத்தத்தில் இருப்பது, ஹீமோகுளோபின். ‘ஹீம்’ என்றால் ‘இரும்பு’ என்று அர்த்தம்.
இன்றைய காலக்கட்டத்தில் பலரும் ரத்தம் சம்மந்தமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?
மாதுளை
100 கிராம் பழத்தில், 0.30 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது. ஆக்சிஜன் ரேடிக்கலை உறிஞ்சும் திறன் இதில் அதிகம். மாதுளம்பழச் சாற்றில் தேன் கலந்து தினமும் காலை உணவுக்குப் பின்னர் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும்.
mydukaan
அத்திப்பழம்
100 கிராம் அத்திப்பழத்தில் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
பேரீச்சை
100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள் உள்ளன; 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும்.
பீட்ரூட்
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும்.
Shutterstock
செம்பருத்தி
செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து, சுற்றியுள்ள இதழ்களை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம்
நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாகும்.
kamalascorner