உடலில் உள்ள எலும்புகளை வலுவாக்க உதவும் எளிய உணவுகள்
உடலில் உள்ள எலும்புகள் வலுவாக இருந்தால் தான் எந்தவித பிரச்சினைகளும் இன்றி ஆரோக்கியமாக இருக்க முடியும்.
அந்த வகையில் பார்க்கும் போது நம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க கால்சியம், விட்டமின் டி அடங்கிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களுமே எலும்பின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் மிகவும் அவசியம்.
எலும்பு ஆரோக்கியத்திற்கான உணவுகள் குறித்து காண்போம்
சோயா பீன்ஸ்
சோயா பீன்ஸ் புரதம் மற்றும் கால்சியத்தின் மிகச்சிறந்த மூலமாக உள்ளது. இது குறித்து ஆராய்ச்சி செய்த போது சோயா பீன்ஸ்யை உட்கொள்வது மாதவிடாய் நின்ற பெண்களின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எனவே மாதவிடாய் நின்ற பெண்கள் சோயா பீன்ஸை எடுத்துக் கொள்வது நல்லது.
பச்சை இலை காய்கறிகள்
பச்சை இலை காய்கறிகளை எல்லோரும் உணவில் சேர்க்க வேண்டும். காலே, ப்ரோக்கோலி மற்றும் கீரை போன்ற காய்கறிகள் பல்வேறு வகையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. அவை உங்க எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல பிற நாள்பட்ட நோய்களையும் விரட்டுகின்றன.
பூசணி விதைகள்
பூசணி விதைகள் மக்னீசியம் அடங்கிய மூலமாகும். இது உங்க எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மெக்னீசியத்தை அதிக அளவில் உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது. பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. அவை வீக்கத்தை குறைத்து எலும்பின் வலிமையை பராமரிக்கின்றன.
மத்தி மீன்
இந்தியாவில் பரவலாக உண்ணப்படும் மீன்களில் மத்தி மீனும் ஒன்றாகும். கேரளா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதியில் இது பிரதான உணவின் ஒரு பகுதியாகும். மத்தி மீனில் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி 12, பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற எலும்புகளை உருவாக்கும் தாதுக்களின் வளமான மூலங்கள் காணப்படுகின்றன.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள்
அதிக சோடியம் அல்லது உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள் நம்முடைய இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த உணவுகள் நம் எலும்புகளுக்கு நல்லது கிடையாது.
செயற்கை பானங்கள்
சர்க்கரை அதிகம் கொண்ட பானங்கள் உங்க பற்களுக்கும் எலும்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே முடிந்த வரை சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களில் இருந்து கொஞ்சம் விலகியே இருப்பது நலம்