இந்த 5 உணவுகளை தள்ளியே வைச்சிடுங்க! தொடர்ந்து சாப்பிட்டால் மாரடைப்பு வருமாம் உஷார்
உடலில் உள்ள இதயம் ராஜ உறுப்பாகும். அதிக அளவு உப்பு, சர்க்கரை, நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உணவுகளை சாப்பிட்டால் மாரடைப்பு போன்ற இதயநோய்கள் ஏற்படும்.
இதயநோய் ஏற்படாமல் இருக்க சில உணவுகளை தள்ளி வைப்பதே நல்லது.
பன்றி இறைச்சி
பன்றி இறைச்சியின் கலோரிகளில் பாதிக்கும் மேலானது நிறைவுற்ற கொழுப்பிலிருந்து வருகிறது. பன்றி இறைச்சியை சாப்பிட்டு வந்தால் அது கெட்ட கொழுப்பை உயர்த்தி, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும். இது உப்பு நிறைந்த ஒரு உணவாகும். அதனால் பன்றி இறைச்சி உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது மற்றும் இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
சிவப்பு இறைச்சி
மாட்டிறைச்சி, செம்மறி ஆட்டுக்கறியை அதிகமாக சாப்பிடுவது இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்க்கான வழியை ஏற்படுத்தும். இதற்கு காரணம் இதில் உள்ள அதிகமான கொழுப்புகள் தான்.
வெண்ணெய்
வெண்ணெயில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளது, இது உங்கள் கெட்ட கொழுப்பை உயர்த்தி இதய நோய்களை அதிகமாக்குகிறது. கொழுப்புகளைக் கொண்ட வெண்ணெய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தலாம்.
பிரஞ்ச் பிரைஸ்
பல உணவகங்களில் பிரஞ்ச் பிரைஸ் அதிகம் தயாரிக்கப்படுகிறது. இதன் வறுத்த உருளைக்கிழங்கில் நிறைய கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது, இது உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிரஞ்ச் பிரைஸ் உணவை வாரத்திற்கு 2 முதல் 3 முறை சாப்பிடுப்வர்கள் சீக்கிரம் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
உருளைக்கிழங்கு சிப்ஸ்
உருளைக்கிழங்கு சிப்ஸ் உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகளில் ஒன்றாகும். மேலும் அவை நிறைவுற்ற கொழுப்பை கொண்டுள்ளதோடு அதிக உப்பையும் கொண்டிருக்கிறது.
ஆகவே இதை நிறைய சாப்பிடவே கூடாது.