படுத்த உடனே சுகமான தூக்கம் வர வேண்டுமா? இந்த எளிதான உணவுகள் இருக்கே
இந்த காலக்கட்டத்தில் தூக்கமின்மை பிரச்சனையால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். தூக்கம் என்பது நம்மால் தவிர்க்க முடியாத மற்றும் நமக்கு தேவையான ஒரு இன்றியமையாத செயல்பாடு.
மேலும் நமது உடல் மற்றும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க தூக்கம் உதவுகிறது. போதுமான அளவு தூங்குவது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. நீண்ட ஆயுள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தூக்கம் மிகவும் இன்றியமையாதது.
தூக்கமின்மையை போக்க உதவும் சில உணவுகளை காண்போம்.
சூடான பால்
தூங்க செல்வதற்கு ஒரு 45 நிமிடங்கள் முன் மிதமான சூட்டில் பாலை குடிப்பது நன்றாக தூங்க உதவுகிறது. பாலில் காணப்படும் மெலடோனின் (melatonin) மற்றும் செரோடோனின் (serotonin) ஒருவரை நிம்மதியாக தூங்க செய்கிறது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் இயற்கையான கார்போஹைட்ரேட் உள்ளது. இது இயற்கை முறையில் தூக்கத்தை வர வழைக்க உதவுகிறது. இதில் இருக்கும் என்சைம்கள் புரோபயாடிக்குகளை வளர்க்க உதவுகின்றன. அதே போல வாழைப்பழங்கள் ப்ரீபயாடிக்குகளின் நல்ல மூலமாகும். ப்ரீபயாடிக்குகள் நம் உடலில் சேர்வது நிம்மதியான உறக்கம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.
செர்ரி
பினியல் சுரப்பி மூலம் இரவில் வெளியிடப்படும் மெலடோனின் என்ற ஹார்மோன் செர்ரிக்களில் இருக்கிறது. இது தூக்க கழகத்தை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் நன்றாக தூங்க உதவி செய்கிறது.
தேன்
தேனில் காணப்படும் இயற்கை சர்க்கரை இன்சுலின் அளவை அதிகரிக்க செய்கிறது. இது மூளையில் டிரிப்டோபன் மற்றும் செரோடோனின் நுழைவதற்கு உதவி தூக்கத்திற்கு உதவும்.