மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை மறந்து கூட எடுத்து கொள்ளாதீங்க... ஆபத்தை ஏற்படுத்துமாம்
Amenorrhoea
By Kishanthini
பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது ஒரு முக்கியமான காலகட்டமாகும்.
இந்த சமயத்தில் பெண்கள் இரும்புச்சத்து மிகுந்த உணவுகள், வைட்டமின் கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான ஒன்றாகும்.
அதே சமயத்தில் சில வகையான உணவுகளை சாப்பிடாமல் இருப்பதே சிறந்ததாகும். அப்படி எந்த உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.
- வெள்ளை பிரட், பாஸ்தா, பாக்கெட் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவை, கேக் போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் சாப்பிட கூடாது.
- கொழுப்பு நிறைந்த உணவுகள் மற்றும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட உணவுகளை மாதவிடாய் காலத்தில் எடுத்துக் கொள்வது என்பது கூடாது.
- பொரிக்கப்பட்ட உணவுகளான வெங்காய சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், டோ நட்ஸ், பேக் செய்யப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், கொழுப்பு மிகுந்த இறைச்சி, சீஸ், கொழுப்பு மிகுந்த பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
- நீங்கள் உணவில் அதிகமாக உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
- உப்பு சேர்த்து செய்யப்பட்ட நட்ஸ், ஸ்நேக்ஸ், ஊறுகாய், புகையால் சமைக்கப்பட்ட உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட உணவுகள், சீஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம்.
- இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்வது மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பது அவசியமானது ஆகும்.
- மிட்டாய், சோடா, இனிப்பு உள்ள பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்ப்பானங்கள், ஸ்வீட்ஸ், கேட், குக்கீஸ் போன்ற உணவுகளை மாதவிடாய் காலத்தில் தவிர்ப்பதன் மூலமாக எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கலாம்.
- ஆல்கஹால் பருகுவது என்பது மாதவிடாய் காலத்தில் உள்ள வலியை அதிகரிக்க செய்யும். இதனை தவிர்ப்பது நல்லது.
- கொழுப்பு நிறைந்த ரெட் மீட் மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதால் உடல் வலி உண்டாகும். இதனை தவிர்ப்பது அவசியம்.
- காபி, டீ, காஃபின் உள்ள உணவுகள், எனர்ஜியை கொடுக்கும் பானங்கள், சாக்லேட் போன்றவற்றில் காஃபின் நிறைந்திருப்பதால், இதனை மாதவிடாய் காலத்தில் சாப்பிடும் போது உங்களுக்கு மன அழுத்தம் உண்டாகும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US