எந்த கால்பந்து அணி ரசிகர்கள் அதிகமாக பொலிசாரால் கைதாகியுள்ளனர்... விரிவான தகவல்
பிரபலமான கால்பந்து அணிகளில் கைது அல்லது தடை உத்தரவு பெற்ற வெறித்தனமான ரசிகர்கள் பற்றிய முழுமையான தரவுகள் வெளியாகியுள்ளது.
682 பேர்களுக்கு தடை
2022 மற்றும் 2023 சீசனில் ஒவ்வொரு கால்பந்து அணியிலும் புதிதாக கைதானவர்கள் மற்றும் தடை விதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து கால்பந்து அணிகளின் ரசிகர்களில் எவர் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2013 மற்றும் 2014 சீசனுக்கு பிறகு கைது மற்றும் தடை விதிக்கப்பட்ட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது. கடந்த சீசனில் மட்டும் 682 பேர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதில் சிலருக்கு 12 ஆண்டுகள் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கால்பந்து தொடர்பான தடைகள் நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் வரையில் அளிக்கப்படுகிறது. கலவரத்தில் ஈடுபடுதல், அத்துமீறி களத்தில் இறங்குதல் மற்றும் மது போதையில் தவறாக நடந்து கொள்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு 5 ஆண்டுகள்.
தற்போது வெளியான தரவுகளில் மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்கள் அதிகபட்சமாக 69 தடை உத்தரவை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. இரண்டாவது இடத்தில் Millwall, 3வது Leicester City, நான்காவது Birmingham City, 5வது West Ham United ஆகிய அணிகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
1,600 பேர்களின் கடவுச்சீட்டுகள்
West Ham United அணி ரசிகர்களே அதிக எண்ணிக்கையில், மொத்தம் 89 பேர்கள் கைதாகியுள்ளனர். மான்செஸ்டர் யுனைடெட் அணி ரசிகர்கள் 83 பேர்கள், மூன்றாம் இடத்தில் 69 கைதுகளுடன் லீட்ஸ் யுனைடெட் அணி உள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில், மது தொடர்பான குற்றங்கள் 25 சதவீதத்தில் இருந்து ஒன்பது சதவீதமாக குறைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ஜூன் 14ம் திகதி முதல் யூரோ கிண்ணம் கால்பந்து தொடர் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், கால்பந்து வெறியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 1,600 பேர்களின் கடவுச்சீட்டுகளை ஜூன் 4ம் திகதி முதல் ஒப்படைக்க பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த உத்தரவை மீறி எவரேனும் ஜேர்மனிக்கு பயணப்பட்டால், 6 மாதங்கள் சிறை அல்லது பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |