இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் மரணம்! உங்கள் ஆன்மா நிம்மதி பெறட்டும் - ரிஷி சுனக் இரங்கல்
இங்கிலாந்து உலகக் கோப்பை வெற்றியாளரும், மான்செஸ்டர் யுனைடெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான பாபி சார்ல்டன் தனது 86வது வயதில் சனிக்கிழமை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பாபி சார்ல்டன்
1966 உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்தின் அணியில் சார்ல்டன் ஒரு முக்கிய நபராக இருந்தார், அவர் தனது சகோதரர் ஜாக்குடன் இணைந்து விளையாடினார்.
மேலும் அவர் யுனைடெட் அணிக்காக 758 போட்டிகளில் விளையாடி 249 கோல்களை அடித்தார்.
கடந்த 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற மூனிச் விமான விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சார்ல்டன், அடுத்தடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து ரசிகர்களை வைத்திருந்தார்.
Very sad to hear of the death of Sir Bobby Charlton.
— Rishi Sunak (@RishiSunak) October 21, 2023
He has a place in history as one of the game’s greatest players and was hugely loved.
Rest in peace Sir Bobby.https://t.co/zD7iF9HlGG
இந்நிலையில் இவர் தனது 86 வயதில் வயதில் உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மறைவிற்கு, ஐரோப்பிய கால்பந்து யூனியன், சர்வதேச கால்பந்து அமைப்புகள், கால்பந்து ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The Premier League is deeply saddened to hear of the passing of Sir Bobby Charlton, one of the greatest players in English football history.
— Premier League (@premierleague) October 21, 2023
Our thoughts and sincere condolences go to Sir Bobby’s family and friends, and to all at Manchester United. pic.twitter.com/8jMnS3qJIG
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |