35 வயதில் உயிரிழந்த பிரபல கால்பந்தாட்ட வீரர்., அதிர்ச்சியில் PSG
மொராக்கோ மற்றும் மார்செய்ல் முன்னாள் midfielder அப்துல்அசீஸ் பராடா (Abdelaziz Barrada) 35 வயதில் காலமானார்.
அவரது மறைவுக்கு Paris Saint-Germain (PSG) மற்றும் Marseille அணிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.
PSG தனது "மிகுந்த வருத்தத்தை" பகிர்ந்துகொண்டது, மற்றும் மார்செய்ல் X வலைதளத்தில் "Rest in peace Abdelaziz" எனச் சொல்லி விடைகொடுத்தது.
பிரான்ஸில் பிறந்த பராடா, PSG-யின் ரிசர்வ் அணியில் தனது தொழில்முறை பயணத்தைத் தொடங்கி, பின்னர் ஸ்பானிஷ் கிளப் Getafe அணியில் மிகுந்த திறமையுடன் விளங்கினார்.
அபு தாபியில் உள்ள Al Jazira அணியில் சிறுகாலம் விளையாடிய பின், 2014-ல் மார்செய்ல் அணியில் இணைந்து இரண்டு பருவங்களில் பங்களிப்பு செய்தார். பின்னர், வளைகுடா பிராந்தியங்களில் பல வாய்ப்புகளைத் தேடினார்.
2012 முதல் 2015 வரை, மொராக்கோ தேசிய அணிக்காக 28 போட்டிகளில் விளையாடி, நான்கு கோல்கள் அடித்துள்ளார்.
2012 லண்டன் ஒலிம்பிக்கில் மொராக்கோ அணியின் கேப்டனாக விளையாடிய அவர், ஹொண்டூராஸுக்கு எதிரான 2-2 சமநிலையில் முக்கிய கோல் அடித்தார். மேலும், 2011-ல் U-23 Africa Cup இறுதிக்கு அணியை நெறிப்படுத்திய முக்கிய வீரராக இருந்தார்.
Moroccan Royal Football Federation (FRMF) பராடாவின் மறைவை "மிகப் பாரிய துயரம்" என்று கூறியுள்ளது.
PSG மற்றும் மார்செய்ல் அணிகளும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன. 2021-ல் தனது விளையாட்டு வாழ்க்கையை நிறைவு செய்த பராடா, துருக்கி, கத்தார், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல அணிகளில் ஆடியுள்ளார்.
அவரது திடீர் மரணத்திற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, ஆனால் சில தகவல்கள் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Former Morocco, Marseille midfielder Abdelaziz Barrada dies at 35, Abdelaziz Barrada