என்னை உருவாக்கிய துணை! பேட்மிண்டன் வீராங்கனையை கரம்பிடிக்கும் இந்திய கால்பந்து வீரர்
இந்திய கால்பந்து அணி வீரர் சஹால் அப்துல் சமாத்துக்கும், பேட்மிண்டன் வீராங்கனைக்கும் திருமணம் நிச்சயம் முடிந்துள்ளது.
இந்திய கால்பந்து அணியில் நடுகள வீரராக விளையாடி வருபவர் சஹால் அப்துல் சமாத். இவர் கேரள பிளாஸ்டர்ஸ் என்ற கிளப் அணியிலும் விளையாடி வருகிறார்.
25 வயது இளம் வீரரான அப்துல் சமாத், இந்திய அணிக்காக 18 போட்டிகளில் விளையாடி 2 கோல்களையும், கேரளா அணிக்காக 72 போட்டிகளில் 7 கோல்களையும் அடித்துள்ளார்.
இந்த நிலையில் பேட்மிண்டன் வீராங்கனை ரேஸா பர்ஹத்துடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அத்துடன் என்னை உருவாக்கிய துணையை கண்டுபிடித்துவிட்டேன், இது அதிகாரப்பூர்வமானது என மகிழ்ச்சியுடனும், உருக்கத்துடனும் பதிவிட்டுள்ளார்.
Found my forever and made it official ❤️? pic.twitter.com/7shxXIgEPS
— Sahal Abdul Samad (@sahal_samad) July 4, 2022
PC: Twitter (@KeralaBlasters)