ஹைதராபாத்திற்கு வரும் லியோனல் மெஸ்ஸி! புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் நிர்ணயம்
ஹைதராபாத்திற்கு வரும் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி உடன் புகைப்படம் எடுக்க ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வரும் மெஸ்ஸி
உலக கால்பந்து விளையாட்டின் ஜாம்பவானும், அர்ஜென்டினா கால்பந்து அணியின் வீரருமான லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக ஹைதராபாத்திற்கு வரும் 13ம் திகதி மெஸ்ஸி வருகை தரவுள்ளார்.

மேலும் அப்போது மெஸ்ஸி அவரது ரசிகர்களுடன் சிறப்பு புகைப்படங்களை எடுத்துக் கொள்வார் என்றும், அதற்கான கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி தெரிவித்துள்ளார்.
100 பேர் மட்டுமே அனுமதி
இந்திய ரசிகர்களுடனான மெஸ்ஸியின் சந்திப்பு 13ம் திகதி ஃபலக்னுமா அரண்மனையில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருடன் புகைப்படம் எடுப்பதற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்படும் என்றும், மொத்தமாக 100 பேர் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உப்பல் மைதானத்தில் 3 மணி நேர நிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் மெஸ்ஸி கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நடைபெறும் அணிவகுப்பில் ஆந்திர முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை கவுரவிக்க உள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |