உக்ரைனிய கால்பந்து வீரரை கண்கலங்கவைத்த ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
போலந்தில் நடந்த ரீமியர் லீக் கால்பந்து போட்டி மைதானத்தில் உக்ரைன் வீரரை ஆதரவுக் குரல்கள் நெகிழ்ந்து கண்கலங்கவைத்தன. அதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்த அணிகளுக்கான போட்டிதான் இந்த ப்ரீமியர் லீக் (Premier League) போட்டி. உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து 5 நாட்களாக போர் நடத்திவருகிறது.
போரை நிறுத்துமாறு பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துவருகின்றனர். மேலும், ரஷ்யா மீது பொருளாதார மற்றும் பிற தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், போலந்தில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் கால்பந்து போட்டியின் நடந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது. இதில் போலந்தின் Benfica அணிக்காக விளையாடுகிறார் உக்ரைனிய வீரர் ரோமன் யரேம்சுக் (Roman Yaremchuk).
நேற்று மைதானத்தில் பென்ஃபிகா அணி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஆட்டத்தின் 62-வது நிமிடத்தில் உக்ரைன் வீரர் ரோமன் யரேம்சுக் சப்ஸ்டிட்யூட்டாக அழைக்கப்பட்டார். மாற்று ஏற்பாடாக அழைக்கப்பட்ட ரோமனின் கையில் கேப்டன் ஆர்ம் பேண்டை டிஃபண்டர் ஜேன் வெர்டோகென் (Jan Vertonghen) கட்டினார்.
இதை சற்றும் எதிர்பாராத யரேம்சுக் கண் கலங்கினார். அப்போது அரங்கம் முழுவதும் நிறைந்த மக்கள் உக்ரைன் கொடியை உயர்த்திக் காட்டியும், நாங்கள் உக்ரைனை ஆதரிக்கிறோம், போர் வேண்டாம் போன்ற பதாகைகளையும் உயர்த்திக் காட்டினர். மேலும், அரங்கிலிருந்த அனைவருமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி வீரரை உற்சாகப்படுத்தினர்.
¡SLAVA UKRAINI! ??
— Nuno (@enganjento) February 27, 2022
?⚪️?
?❤️? pic.twitter.com/NNh4vcnwHb
அந்த ஆதரவைப் பார்த்த ரோமன் யரேம்சுக் நெகிழ்ச்சியில் கண்கலங்கினார். ஒற்றுமையாக ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கு முதலில் அவரது கண்கள் கலங்கின, பின்னர் உணர்ச்சிப் பெருக்கில் அவரது உதடுகள் துடித்தன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் தங்களது ஆதரவை பதிவு செய்து வருகின்றனர்.
¡SLAVA UKRAINI! ??
— Nuno (@enganjento) February 27, 2022
?⚪️?
?❤️? pic.twitter.com/NNh4vcnwHb