ஓய்வை அறிவித்தார் லியோனல் மெஸ்ஸி! இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான கடிதம்
Footballer Lionel Messi Announced Retirement: சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
ஓய்வை அறிவித்தார் லியோனல் மெஸ்ஸி
கால்பந்து உலகின் ஜாம்பவான் வீரராக கருதப்படும் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தன்னுடைய 39வது வயதில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மெஸ்ஸியின் கையெழுத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக நெகிழ்ச்சி பதிவு ஒன்றை மெஸ்ஸி பகிர்ந்துள்ளார்.

அதில், “உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த இவ்வளவு காலத்திற்கு பிறகும், பலமுறை யோசனை செய்த பிறகும் தேசிய அணியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை உறுதியாக எடுத்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேம்.”
இந்த முடிவு என்னை புண்படுத்திய, இன்னும் புண்படுத்தி கொண்டிருக்கிற முடிவு தான். இருந்தாலும் இது தான் சரியான தருணம் என்று நான் உணர்கிறேன் என மெஸ்ஸி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெற்றி, தோல்விகளில் தன்னுடன் நின்ற ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் சக வீரர்களுக்கு நன்றியையும் மெஸ்ஸி வெளிப்படுத்தியுள்ளார்.
2006ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை தேசிய அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி இதுவரை 6 உலகக் கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |