இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பிரபல கால்பந்து வீரர் உயிரிழப்பு
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தின் பீலே என அழைக்கப்படும் சுலைமான் அல்-உபைத் உயிரிழந்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல்
கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே காசாவில் போர் நடைபெற்று வருகிறது.
காசாவை முழுவதும் கைப்பற்றும் நோக்கில் உள்ள இஸ்ரேல் ராணுவம், மனிதாபிமான உதவி பெற காத்திருக்கும் பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் திகதி, மனிதாபிமான உதவிகள் பெற காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில், கால்பந்து வீரர் சுலைமான் அல்-உபைத்(Suleiman Obeid) உயிரிழந்துள்ளார்.
பாலஸ்தீனத்தின் பீலே
காசாவை சேர்ந்த 41 வயதான சுலைமான் அல்-உபைத்(Suleiman Obeid), 'பாலஸ்தீனத்தின் பீலே' என அழைக்கப்படுகிறார். இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளது.
பாலஸ்தீனத்தின் தேசிய கால்பந்து அணிக்காக 24 போட்டிகளில் விளையாடி, 2 கோல்களை அடித்துள்ளார்.
இவரின் மறைவிற்கு, FIFA தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளது. இதனை பகிர்ந்த பிரபல கால்பந்து வீரர் Salah அவர் எங்கே இறந்தார் எப்படி இறந்தார் என கூற முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Can you tell us how he died, where, and why? https://t.co/W7HCyVVtBE
— Mohamed Salah (@MoSalah) August 9, 2025
இஸ்ரேலின் தாக்குதலில், உயிரிழந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது.
இதில், கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள். கிளப் நிர்வாகிகள் என 321 உயிரிழந்ததாக கூறப்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |