உலகக் கோப்பை கால்பந்து: ஜேர்மன் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஈக்வடார்
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் ஆட்டத்தில் ஜேர்மனி அணியை வீழ்த்தி ஈக்வடார் அபார வெற்றி பெற்றுள்ளது.
சமனில் முடிந்த முதல் பாதி
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் குரூப் E பிரிவை சேர்ந்த ஜேர்மனி மற்றும் ஈக்வடார் அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் தொடக்கத்திலேயே, அதாவது ஆட்டத்தின் 7 வது நிமிடத்தில் ஜேர்மனி அணியின் லெராய் சானே சால் கோல் அடித்து ஆட்டத்தை திருப்பினார்.

ஆனாலும் மனம் தளராத ஈக்வடார் அணியின் வீரர்கள் கடுமையான போட்டியை ஜேர்மனிக்கு எதிராக கட்டமைத்தனர்.
அத்துடன் ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் ஈக்குவடார் அணியின் நெல்சன் அங்குலோ அபாரமான கோல் அடித்து ஜேர்மன் அணியில் கோல் கணக்கை சமன் செய்தார்.
ஈக்வடார் வெற்றி
ஆட்டத்தின் பிடியை விடாமல் போராடியது இரண்டு அணிகளும், இருப்பினும் ஆட்டத்தின் 77வது நிமிடத்தில் ஈக்வடார் வீரர் கொன்சாலோ பிளாட்டா 77வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் ஈக்வடார் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னேறியது.
அத்துடன் ஆட்டத்தின் இறுதி நேர முடிவு வரை இந்த முன்னிலை நீடித்ததால் ஜேர்மனி அணியை வீழ்த்தி ஈக்வடார் அபார வெற்றிப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |