ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற காருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம்.., பரபரப்பான வீடியோ
கேரள மாநிலத்தில் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் சென்ற கார் உரிமையாளருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வழிவிடாமல் சென்ற கார்
இந்திய மாநிலமான கேரளா, திருச்சூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 7 ஆம் திகதி திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு செல்லுகின்ற வழியில் அவசரமாக ஆம்புலன்ஸ் ஒன்று பயணித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அந்த சாலையில் மாருதி சுஸுகி கார் ஒன்று ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமல் செல்கிறது. இதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒலி எழுப்பியும், கார் டிரைவர் வழி விடாமல் செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
மோட்டார் வாகனச் சட்டத்தின் படி, தீயணைப்பு சேவை வாகனம், ஆம்புலன்ஸ், மாநிலஅரசால் நியமிக்கப்பட்ட பிற அவசர ஊர்தியை கடந்து செல்ல அனுமதிக்காத எந்த ஓட்டுநருக்கும் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இந்நிலையில், ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாத கார் ஓட்டுநருக்கு மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழில் (PUCC) இல்லாதது உள்ளிட்ட பல வீதிமீறல்களில் ஈடுபட்டதாக கூறி ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Such an insane & inhuman act.
— Vije (@vijeshetty) November 16, 2024
A car owner in Kerala has been fined Rs/- 2.5 Lakh and their license has been cancelled for not giving away the path for an ambulance.
Well done @TheKeralaPolice pic.twitter.com/RYGqtKj7jZ
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |