இருமல், சளி எந்த பிரச்சினையாக இருந்தாலும் இந்த ஒரு பொருள் சாப்பிட்டால் போதும்!
இந்தியாவின் தனித்துவமான மசாலா பொருட்களில் மிளகுக்கு என்று தனி இடம் உள்ளது. இந்தியாவின் வரலாறுக்கும், மிளகுக்குமே சுவராஸ்யமான தொடர்பு உள்ளது.
ஏனெனில் ஆங்கிலேயர்கள் முதன் முதலில் மிளகை கொள்முதல் செய்யத்தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தார்கள். அந்த அளவிற்கு அனைத்து நாட்டினரையும் ஈர்க்கும் குணம் மிளகுக்கு உள்ளது.
சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம். தண்ணீரை சூடாக்கித்தான் குடிக்க வேண்டும். வெந்நீருக்கு தொண்டையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. இது சளி, காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்.
மிளகு கொடியின் வகையை சார்ந்தது. இந்த மிளகு சித்த மருத்துவத்திலும் சிறப்பிடம் உள்ளது. நறுமணப் பொருட்களின் அரசனாக கருதப்படுவது இந்த மிளகைத்தான். மிளகு உற்பத்தியில் கேரளா முன்னிலையில் உள்ளது.அதற்கடுத்தபடியாக, கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.
சளி தொல்லை
அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.
தோல் தடிப்பு, அரிப்பு
மிளகை பொடி செய்து, அருகம்புல் சிறிதளவு சேர்த்து, நீரில் கொதிக்க வைத்து குடித்தால் பூச்சி கடி காரணமாக ஏற்படும் தோல் தடிப்பு, அரிப்பு போன்றவை குணமாகும்.
உடலுக்கு ஆரோக்கியம்
சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன. பொதுவாகவே, சளி போன்ற பாதிப்புகள் இல்லாத நாள்களிலும் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதும் ஆரோக்கியம் தரும்.
இருமல்
நான்கு பூண்டு பல்லுடன் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றிச் சேர்த்து பூண்டைப் பொரித்து, சூடு ஆறுவதற்குள் இதைச் சாப்பிட்டுவிட வேண்டும். பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். இருமலை இயற்கை வழியில் நீக்கும்.
நீர் வழிதல்
ஒரு வெற்றிலையை மிளகுடன் சேர்த்து அதை நீரில் கொதிக்கவைத்து அருந்தினால் தும்மல், கண்களை சுற்றிய அரிப்பு, மூக்கில் நீர் வழிதல் போன்றவை குணமாகும்.
வாய்வு கோளாறு
வாய்வு கோளாறு ஏற்படும்போது நீரில் மிளகினை கொதிக்க வைத்து பனவெல்லம் கலந்து அருந்தினால் வாய்வுக் கோளாறு உடனே தீர்ந்துவிடும்.