சூரிச் பெண் சாரதிக்கு 200,000 பிராங்குகள் அபராதம் விதிப்பு
அசுர வேகத்தில் வாகனம் செலுத்திய சூரிச் பெண் சாரதிக்கு 200,000 பிராங்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சூரிச் பெண் சாரதி ஒருவர் கடந்த 2018ல் அதிக வேகமாக வாகனம் ஓட்டியுள்ளதாக கண்டறியப்பட்டது. சம்பவத்தின் போது அவர் மணிக்கு 43 கி.மீ வேகத்தில் Schwyz மாநிலத்தின் Wollerau நகருக்கும் Schindellegi நகருக்கும் இடையே பயணித்துள்ளார்.
குறித்த பெண் சாரதி ஏற்கனவே இரண்டு முறை போக்குவரத்தில் கவனக்குறைவுக்காக நிபந்தனை அபராதத்திற்கான உத்தரவுகளை பெற்றிருந்ததால், தற்போது அவர் மீண்டும் சிக்கியுள்ளதால் நிபந்தனையற்ற அபராதத்தைப் பெறுகிறார் என கூறப்பட்டுள்ளது.
செல்வந்தரான குறித்த பெண்மணிக்கு 85 நாட்கள் நாள் ஒன்றிற்கு 2230 பிராங்குகள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மொத்தமாக 189,550 பிராங்குகள் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது..
மேலும், இன்னொரு 13,500 பிராங்களும் அவர் அபராதமாக செலுத்த வேண்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக குறித்த சூரிச் பெண் சாரதி அபராதமாக 209,000 பிராங்கள் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதிக வேகம் தொடர்பில் Höfe மாவட்ட நீதிமன்றம் முதலில் அவருக்கு 180 நாட்கள் தலா 2230 பிராங்கள் அபராதம் விதித்திருந்தது. அதாவது மொத்தம் 401,400 பிராங்கள் அவர் செலுத்த வேண்டி வந்தது.
இதனையடுத்து அவர் மேல்முறையீடு மேற்கொண்டதில் மாநில நீதிமன்றம் அபராத தொகையை பாதியாக குறைத்துள்ளது.