பாரிஸ் நகரில் அவசரமாக ஒன்றுகூடும் உலகத் தலைவர்கள்: ஒரே ஒரு காரணம்
லெபனான் தொடர்பில் முடிவெடுக்கும் பொருட்டு வல்லரசு நாடுகள் உட்பட உலகத் தலைவர்கள் பலர் அவசரமாக பாரிஸில் சந்திக்க உள்ளனர்.
போர்நிறுத்தத்திற்கு அழுத்தம்
லெபனானுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குதல், அதன் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு வியாழன் அன்று பாரிஸில் இந்த சந்திப்பானது முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால் அமெரிக்க தனியாக முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், உறுதியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறோம் என்று முதன்மை அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
லெபனானுடன் வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டுள்ள பிரான்ஸ் தற்போது போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஆனால் செப்டம்பர் மாதம் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படைகள் மீது இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியதில் இருந்து பிரான்ஸ் நிர்வாகத்தின் தலையீடு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய தாக்குதலை அடுத்து ஆயிரக்கணக்கான லெபனான் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன், கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2,000 கடந்துள்ளது. லெபனானில் தங்களுக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது என்பதைக் காட்டுவதற்காக பிரான்ஸ் நிர்வாகம் அவசர அவசரமாக மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
தலையிட மறுக்கும் சவுதி
ஆனால் 70 பிரதிநிதிகள் மற்றும் 15 சர்வதேச அமைப்புகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டாலும், சில முக்கிய அமைச்சர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
இதனிடையே, வெள்ளியன்று லண்டனில் சந்திப்புகளை முன்னெடுக்கும் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஆண்டனி பிளிங்கன் பாரிஸ் கூட்டத்தை புறக்கணிப்பார் என்றே கூறப்படுகிறது, அவருக்கு பதிலாக ஒரு துணை அதிகாரியை அனுப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லெபனான் விவகாரத்தில் தலையிட மறுக்கும் சவுதியும், பாரிஸ் கூட்டத்தை புறக்கணிக்கும் என்றே கூறப்படுகிறது. 2006 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1701ன் அடிப்படையில் போரை நிறுத்த வேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், இடம்பெயர்ந்துள்ள சுமார் 1 மில்லியன் மக்களுக்கு உதவும் வகையில் சர்வதேச சமூகம் லெபனானில் நுழைய முடிவெடுக்கப்படும். இதனிடையே, தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க மாதம் 250 மில்லியன் டொலர் தேவை என்று லெபனான் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |