முதல் முறையாக குடியரசுத் தலைவர் மாளிகையில் திருமணம்.., யாருக்கு தெரியுமா?
வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையாக குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்திற்குள் திருமணத்தை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு திருமணம்?
74வது குடியரசு தின அணிவகுப்பின் போது அனைத்து பெண்களும் அடங்கிய குழுவிற்கு தலைமை தாங்கிய CRPF உதவி கமாண்டன்ட் பூனம் குப்தாவிற்கு பிப்ரவரி 12ம் திகதி அன்று திருமணம் நடைபெறவிருக்கிறது.
மத்திய பிரதேசத்தின் சிவபுரியை சேர்ந்த பூனம் குப்தாவிற்கும், காஷ்மீரில் சிஆர்பிஎப் துணை கமாண்டராக பணியாற்றும் அவினாஷ் குமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
பூனம் குப்தாவின் முன்மாதிரியான சேவை மற்றும் அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தனிப்பட்ட முறையில் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வந்துள்ளன.
தற்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக (பிஎஸ்ஓ) நியமிக்கப்பட்டுள்ள பூனம் குப்தா தனது திருமண விழாவை குடியரசுத் தலைவர் மாளிகையின் அன்னை தெரசா வளாகத்தில் நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இந்த நிகழ்வில் குறைந்த எண்ணிக்கையிலான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொள்வார்கள். திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் கடுமையான பாதுகாப்பு சோதனைகள் இருக்கும்.
பூனம் குப்தா, கணிதத்தில் இளங்கலை பட்டம், ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் குவாலியரில் உள்ள ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் BEd பட்டம் பெற்றுள்ளார்.
இவர், 2018 UPSC CAPF தேர்வில் 81வது ரேங்க் பெற்ற பிறகு CRPFல் முத்திரை பதித்தார். இதற்கு முன் பீகாரில் நக்சல் பாதித்த பகுதியில் பணிபுரிந்தார்.
இவர் சமூக ஊடகங்களிலும், குறிப்பாக இன்ஸ்டாகிராமிலும் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். தனது பணி, பிரச்சாரங்கள் மற்றும் மாணவர்களுக்கான ஊக்கமளிக்கும் செய்திகளைப் பற்றி தொடர்ந்து பதிவிடுகிறார்.
இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு வழங்கும் புகைப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் சமூக வலைதளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |