உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னர்... 30 விலை மாதர்களுடன் கொண்டாடிய பிரபல கால்பந்து அணி
உலகக் கோப்பை போட்டிகளுக்கு புறப்பட தயாராகிவந்த மெக்சிகோ அணி 30 விலை மாதர்களை அழைத்து பெரும் விருந்து கொண்டாடியதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரியாவிடை விருந்து
ரஷ்யாவில் 2018ல் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்னர் மெக்சிகோ அணிக்கு பிரியாவிடை விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கொண்டாட்டத்திற்கு என மொத்தம் 30 விலை மாதர்கள் அழைக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.
@getty
மட்டுமின்றி, ஸ்கொட்லாந்து அணியுடனான நட்பு ரீதியான ஆட்டத்தில் வென்ற மெக்சிகோ அணியின் 9 வீரர்கள் அப்போது எஸ்கார்ட்களுடன் தனியாக ஒரு பகுதியில் விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஐரோப்பாவுக்கு புறப்படும் முன்னர் மெக்சிகோ அணிக்கு அளிக்கப்படும் உண்மையான பிரியாவிடை விருந்து எனவும் ஊடகங்கள் அப்போது குறிப்பிட்டன. வெளியான தகவலின் அடிப்படையில், மெக்சிகோ அணியின் நட்சத்திர வீரர்களான Guillermo Ochoa, Raul Jimenez, சகோதரர்களான Jonathan மற்றும் Giovani dos Santos உள்ளிட்டவர்கள் அந்த கொண்டாட்டங்கள் கலந்துகொண்டுள்ளனர்.
Image: Paulo Amorim
எஸ்கார்ட்களுடன் தனியாக
ஆனால் இந்த கொண்டாட்டங்களுக்கு மெக்சிகோ அணி நிர்வாகம் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், வீரர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலே முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் ரஷ்யாவுக்குள் வந்திறங்கிய பின்னர் மெக்சிகோ வீரர்கள் ஆட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தியதாகவும், முதல் ஆட்டத்தில் ஜேர்மனியை வெற்றிகொண்டு, இரண்டாவது ஆட்டத்தில் தென் கொரியாவை சிதறடித்ததாகவும் கூறப்படுகிறது.
@getty
இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ அணி ஜாம்பவான் பிரேசில் அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிவாய்ப்பை இழந்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.
குறித்த விவாத கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மொத்த வீரர்களுக்கு மெக்சிகோ அணி நிர்வாகம் அபராதம் விதித்ததுடன், முக்கிய வீரர்கள் சிலருக்கு 6 மாதம் தடையும் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.