உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள்: முதலிடத்தில் யார்?
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
408.5 பில்லியன்
உலகின் மிகவும் பிரபலமான வணிக பத்திரிகையான போர்ப்ஸ், அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகளை மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய உச்சங்களுக்கு கொண்டு சென்றதன் அடிப்படையில் பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகின் முதல் 10 பணக்காரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். பெர்னார்ட் அர்னால்ட் மட்டுமே பிரான்ஸைச் சேர்ந்தவர் ஆவார்.
டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் (Elon Musk) இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது நிகர மதிப்பு 408.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் ஓரக்கல் நிறுவனத்தின் சி.இ.ஓ லாரி எல்லிஸன் (Larry Ellison) உள்ளார். இவரது நிகர மதிப்பு 296.1 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இப்பட்டியலில் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரின் நிகர மதிப்பு ரூ.243.6 பில்லியன் டொலர்கள் ஆகும்.
டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்
- எலோன் மஸ்க் - 408.5 பில்லியன் டொலர்கள்
- லாரி எல்லிஸன் - 296.1 பில்லியன் டொலர்கள்
- ஜெஃப் பெஸோஸ் - 243.6 பில்லியன் டொலர்கள்
- மார்க் ஸுக்கர்பெர்க் - 241.6 பில்லியன் டொலர்கள்
- லாரி பேஜ் - 160.8 பில்லியன் டொலர்கள்
- செர்கே பிரின் - 153.5 பில்லியன் டொலர்கள்
- ஜென்சென் ஹுவாங் - 152.7 பில்லியன் டொலர்கள்
- பெர்னார்ட் அர்னால்ட் - 147.9 பில்லியன் டொலர்கள்
- ஸ்டீவ் பால்மர் - 144.9 பில்லியன் டொலர்கள்
- வார்ரென் பஃப்பெட் - 142.1 பில்லியன் டொலர்கள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |