இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார்? உலக Billionaires பட்டியலில் 200 இந்தியர்கள்!
Forbes உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
போர்ப்ஸ் பட்டியலில் 200 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 169 இந்தியர்களாக இருந்தது.
இந்த அறிக்கையின்படி, இந்திய பில்லியனர்களின் மொத்த சொத்து மதிப்பு 954 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு இது 675 பில்லியன் டொலர்களாக இருந்தது, இது கிட்டத்தட்ட 41 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) 116 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் இந்தியாவின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி (Gautam Adani) 84 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
சமீபத்தில், 25 புதிய இந்தியர்கள் உலகின் மிகவும் பிரபலமான நபர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நரேஷ் ட்ரெஹான், ரமேஷ் குன்ஹிகண்ணன், ரேணுகா ஜக்தியானி ஆகியோருக்கு இடம் கிடைத்தது, ஜெய்ஜு ரவீந்திரன் மற்றும் ரோஹிகா மிஸ்திரி ஆகியோர் தங்கள் இடத்தை இழந்தனர்.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் இவர்கள் தான்
- முகேஷ் அம்பானி- 116 பில்லியன் டொலர்
- கௌதம் அதானி- 84 பில்லியன் டொலர்
- ஷிவ் நாடார்- 36.9 பில்லியன் டொலர்
- சாவித்ரி ஜிண்டால்- 33.5 பில்லியன் டொலர்
- திலிப் ஷங்வி- 26.7 பில்லியன் டொலர்
- சைரஸ் பூனாவாலா- 21.3 பில்லியன் டொலர்
- குஷால் பால் சிங் - 20 பில்லியன் டொலர் டொலர்
- குமார் மங்கலம் பிர்லா - 19.7 பில்லியன் டொலர்
- ராதாகிஷன் தமானி - 17.6 பில்லியன் டொலர்
- லட்சுமி மிட்டல் - 16.4 பில்லியன் டொலர்
உலக பணக்காரர்கள் பட்டியல்
உலகின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி ஒருவர் மட்டுமே உள்ளார். அம்பானி உலகின் ஒன்பதாவது பணக்காரர் ஆவார்.
பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) முதலிடத்தில் உள்ளார். எலோன் மஸ்க் (Elon Musk) இரண்டாவது இடத்திலும், ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
Mark Zuckerberg, Larry Ellison, Warren Buffett, Bill Gates, Steve Ballmer, Mukesh Ambani, Larry Page ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Richest Person in India, Richest Person in the World, Mukesh Amabni, Gautam Adani, Forbes World's Billionaires List, Indian Billionaires List