கனடாவில் திரும்பப் பெறப்படும் சுமார் 33,000 கார்கள்: ஃபோர்டு அதிரடி அறிவிப்பு
கனடாவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 33,000 கார்களை திரும்ப பெறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
சுமார் 33,000 கார்களை திரும்பப் பெறும் ஃபோர்டு
கனடாவில் விற்பனை செய்யப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தின் சுமார் 33,000 வாகனங்களை திரும்ப பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
காரிகளின் டிரான்ஸ்மிஷன் பார்க்(Transmission Park) அம்சத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கார்கள் திரும்ப பெறும் இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, வாகனத்தை பார்க் செய்யும் போது, அதனை உறுதிப்படுத்தும் விதமாக காரில் உள்ள பார்க்கிங் பாவ்ல் பாகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

வாகனம் சென்று கொண்டிருக்கும் போதே இந்த அம்சம் எதிர்பாராமல் செயல்பட தொடங்குவதால் அவை பழுதடைய வாய்ப்பு இருப்பதாகவும், வாகனம் நிறுத்தப்பட்ட பிறகு அவை பொருந்தாமல் வாகனம் தானாக நகரும் அபாயம் உள்ளது.
உங்கள் வண்டியின் டேஷ்போர்டில் Wrench வடிவிலான குறியீடு தோன்றினால் அது பார்க்கிங் பாவ்ல் சேதமடைந்து இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வாகனங்கள்
2021ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Ford F-150, 2018 முதல் 2021ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Ford Expedition, 2020 முதல் 2021 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Ford Explorer, 2018 முதல் 2021ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Lincoln Navigator, 2020 முதல் 2021 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Lincoln Aviator ஆகியவை பாதிக்கப்பட்ட வாகனங்களின் பட்டியலில் உள்ளது.
உங்கள் வாகனம் இந்த திரும்ப பெறுதல் அறிவிப்பின் கீழ் உள்ளதா என்பதை கண்டறிய ford.ca/support/recalls மற்றும் lincolncanada.com/support/recalls ஆகிய இணையதளத்தில் உங்கள் வாகனத்தின் VIN எண்ணை உள்ளிட்டு சரி பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |