10 ஆண்டுகளுக்கும் மேல் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த வெளிநாட்டவர்கள்: தெரியவந்துள்ள அதிரவைக்கும் உண்மை
பிரித்தானியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவந்த வெளிநாட்டவர்கள் ஐந்து பேர் தேசிய பாதுகாப்பு விசாரணை ஒன்றின்போது கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் மூன்று பேர் மீது, ரஷ்யாவுக்காக உளவுபார்த்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரஷ்யாவுக்காக உளவு
பிரித்தானியாவின் உளவுத்துறை உட்பட பல இடங்களில் ரஷ்ய உளவாளிகள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே நிலவிவருகிறது.
ரஷ்ய முன்னாள் உளவாளியான Sergei Skripalக்கும் அவரது மகளான Yulia Skripalக்கும் விஷம் கொடுக்கப்பட்ட விடயம் நினைவிருக்கலாம்.
Credit: Facebook
மூன்று பேர் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில், Orlin Roussev (45), Bizer Dzhambazov (41) மற்றும் அவரது மனைவியான Katrin Ivanova (31) ஆகியோர் பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில், Bizer, Katrin தம்பதியர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவில் வாழ்ந்துவருகிறார்கள். மேற்கு லண்டனில் அவர்களுடைய அக்கம்பக்கத்தவர்கள், தம்பதியர் தங்களுக்கு, கேக், பை போன்ற உணவுப்பொருட்களை சமைத்துத் தருவதுண்டு என்று கூறியுள்ளனர்.
Orlin, 2009ஆம் ஆண்டிலிருந்தே பிரித்தானியாவில் வாழ்ந்துவந்துள்ளார். அவர்கள் கைது செய்யப்பட்டபிறகுதான், தாங்கள் உளவாளிகளுடன் பழகிவந்துள்ளோம் என்பதே மக்களுக்குத் தெரியவந்துள்ளது.
Credit: Facebook
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், மூவரும் லண்டனிலுள்ள Old Bailey நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்கள்.
Credit: Linkedin
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |