ஜேர்மனியில் பிரபலமாகிவரும் 49 யூரோக்கள் பயணச்சீட்டு: வெளிநாடு செல்வதற்கும் பயன்படுத்தலாமாம்
ஜேர்மனியில் சமீபத்தில் அறிமுகமான 49 யூரோக்கள் பயணச்சீட்டு, பொதுமக்களிடையே பிரபலமாகியுள்ளது. அந்த பயணச்சீட்டைப் பயன்படுத்தி ஜேர்மனி முழுவதும் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யலாம் என்பது தெரியும்.
ஆனால், அதே பயணச்சீட்டைப் பயன்படுத்தி சில வெளிநாடுகளுக்கும் செல்லலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆம். சில குறிப்பிட வெளிநாடுகளிலுள்ள, சில நகரங்களுக்கு, அதாவது, ஜேர்மன் எல்லையை ஒட்டியிருக்கும் சில நாடுகளின் சில நகரங்களுக்கு இந்த 49 யூரோக்கள் பயணச்சீட்டைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம்.
எந்தெந்த நாடுகளுக்கு பயணிக்கலாம்?
ஆஸ்திரியாவிலுள்ள Salzburg, Kufstein, Salzburg போன்ற இடங்களுக்கு பயணிக்கலாம்.
பெல்ஜியத்திலுள்ள Kelmis
பிரான்சிலுள்ள Wissembourg, Saargemünd, Creutzwald மற்றும் Carling.
லக்ஸம்பர்கிலுள்ள Vianden, Clervaux
நெதர்லாந்திலுள்ள Vaals, Kerkrade, Sittard
போலந்து நாட்டிலுள்ள Szczecin முதலான சில இடங்கள். ஆனால், நேரடியாக அல்ல
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, குறிப்பாக பேசல் முதலான இடங்களுக்கு ஜேர்மனியின் 49 யூரோக்கள் பயணச்சீட்டைப் பயன்படுத்தி பயணம் செய்யலாம்.