வெளிநாட்டு திரைப்படங்களாலும் கனடாவுக்கு லாபம்தான்: திரையரங்கு உரிமையாளர்கள் தகவல்
கனடாவை ஆளும் தலைவர்களும், அரசியல்வாதிகளும், தொடர்ந்து வெளிநாட்டவர்களால் கனடாவுக்கு நஷ்டம் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு நேர் எதிரான ஒரு தகவலை கனேடிய திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உத்வேகம் அளிக்கும் வெளிநாட்டுத் திரைப்படங்கள்
கோவிட் காலகட்டத்தின்போது வருவாய் இழந்திருந்த கனேடிய திரையரங்குகள், இப்போது மீண்டும் களைகட்டத் துவங்கியுள்ளன.
Eli Glasner/CBC
அதற்குக் காரணம் இந்தி மொழி, கொரிய மொழி முதலான வெளிநாட்டுத் திரைப்படங்கள்தான் என்கிறார்கள் கனடாவின் முக்கிய திரையரங்குகளின் உரிமையாளர்கள்.
கனடாவில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் மொழியில் திரைப்படம் பார்க்கும்போது, தங்கள் சமுதாயத்துடன் இணைக்கப்படுவதுபோல் உணர்வதே அதற்குக் காரணம் என்கிறார்கள் அவர்கள்.
Eli Glasner/CBC
திரைத்துறைக்கு வருவாய் வர முக்கிய காரணம், repeat audience என்னும் மீண்டும் மீண்டும் திரைப்படத்தைப் பார்க்கவருபவர்கள்தான்.
அவ்வகையிலும், வெளிநாட்டுத் திரைப்படங்களைத்தான் மீண்டும் மீண்டும் பார்க்கவருகிறார்கள் ரசிகர்கள் என்கிறார்கள் திரையரங்குகளின் உரிமையாளர்கள்.
ஆக, அரசியல்வாதிகள் வெளிநாட்டவர்களை குறைசொல்லிக்கொண்டே இருந்தாலும், கனேடிய பொருளாதாரத்துக்கு குறிப்பிட்ட அளவில் பங்களிப்புச் செய்பவர்கள் வெளிநாட்டவர்கள்தான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் திரையரங்குகளின் உரிமையாளர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |