இந்தியாவிற்கு கெட்ட செய்தி... ரூ 27,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
காலாண்டு முடிவுகள் ஏற்கனவே பலவீனமாக இருப்பதால், கடந்த சில நாட்களாக இந்திய பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வருகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
அதே நேரத்தில் அமெரிக்கா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், எச்சரிக்கையுடனே வர்த்தகம் முன்னெடுக்கப்படுகிறது. இருப்பினும், இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர்.
கடந்த ஒன்பது வர்த்தக அமர்வுகளில், அவர்கள் ரூ.27000 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். மற்றொரு கவலைக்குரிய காரணி, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான நீண்ட-குறுகிய விகிதம் 0.11 ஆகக் குறைந்துள்ளது.
இது மார்ச் 2023 இல் 0.61 ஆகக் குறைந்த அளவாக இருந்தது. அதாவது 90 சதவீத வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறும் முடிவுக்கு வந்துள்ளனர்.
ஒரே நாளில் ரூ.5,600 கோடி
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தைகளில் இருந்து வெளியேறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பலவீனமான காலாண்டு முடிவுகள், ட்ரம்பின்வரி விதிப்பு நெருக்கடி, வலுவான அமெரிக்க டொலரின் மதிப்பு உள்ளிட்டவையை குறிப்பிடுகின்றனர்.
புதன்கிழமை ட்ரம்பின் வரி விதிப்பு அறிவிப்புக்குப் பிறகு, இந்திய சந்தைகள் வியாழக்கிழமை எதிர்வினையாற்றின. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FIIs) ஒரே நாளில் ரூ.5,600 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுவிட்டு வெளியேறினர்.
ஏற்கனவே பலவீனமான நிறுவன வருவாயால் கவலையடைந்த முதலீட்டாளர்கள், விற்பனையைத் தொடங்கினர் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |