ஜேர்மனியிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
According to the German Interior Ministry, the number of foreign nationals leaving the country slightly increased: ஜேர்மனியிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்படுவோர் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ள நிலையில், ஜேர்மனியிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
நாடுகடத்தப்படுவோர் எண்ணிக்கை
2026ஆம் ஆண்டின் முதல் மாதத்திலிருந்து ஒன்பதாம் மாதம் வரையிலான காலகட்டத்தில், ஜேர்மனியிலிருந்து 14,324 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள்.

2025ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இது 19 சதவிகிதம் குறைவாகும். 2025இல் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,651.
இந்நிலையில், ஜேர்மனியிலிருந்து தாமாக முன்வந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டில் ஜேர்மனியிலிருந்து தாமாக முன்வந்து வெளியேறிய வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 12,263. 2026ஆம் ஆண்டில் ஜேர்மனியிலிருந்து தாமாக முன்வந்து வெளியேறிய வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 14,140.