பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு வெளியுறவு அலுவலகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவரசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
எதற்காக இந்த அவசர எச்சரிக்கை?
ஸ்பெயின் நாட்டில் கொரோனாவைரஸ் தொற்று மற்றும் ப்ளூ காய்ச்சல் அதிகரித்து வருவதால் அந்நாடு மீண்டும் மாஸ்க் விதிகளை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மருத்துவ அமைப்புகளில் மாஸ்க் அணியும் விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Image: Getty Images/iStockphoto
உள்துறை அலுவகத்தில் ஆலோசனை
ஆகவே, ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், குறிப்பாக மருத்துவ அமைப்புகளுக்குச் செல்லும்போது மாஸ்க் அணியவேண்டும் என்றும், மாஸ்க் விதிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைக்கேற்ப நடந்துகொள்ளுமாறும், தொற்றிலிருந்து தஙக்ளையும் மற்றவர்களையும் காத்துக்கொள்ளுமாறும், பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மாஸ்க் விதியை மீண்டும் அறிமுகம் செய்யும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |