பிரித்தானியாவில் சரியாக படிக்காத சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல் உருவாகலாம்: அடுத்த புலம்பெயர்தல் கட்டுப்பாடு
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானியா பல திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பிட்ட தொகையை ஊதியமாக பெறுவோர் மட்டுமே பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் வைத்துக்கொள்ளமுடியும்,
முதுகலை ஆராய்ச்சி படிப்பு படிப்பவர் தவிர்த்து, மற்ற சர்வதேச மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு அழைத்து வர முடியாது,
மாணவர்கள் தங்கள் படிப்பு முடிவதற்குள் வேலை விசாவிற்கு மாற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வெளிநாட்டவர்களைக் குறிவைத்து பல கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற்போல...
ஏற்கனவே சர்வதேச மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ள நிலையில், புலம்பெயர்தல் ஆலோசனைக் கமிட்டியின் (Migration Advisory Committee) தலைவரான பேராசிரியர் Brian Bell புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
Credit: PA
அதாவது, பிரித்தானியாவுக்கு படிக்க வரும் மாணவர்கள், சும்மா கடமைக்குப் படிக்கிறார்களாம். ஏதோ ஒரு பட்டம் வாங்கினால் போதும் என்பது போல அவர்கள் படிக்கிறார்களாம்.
ஆகவே, இனி சர்வதேச மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற விதியைக் கொண்டு வர அந்த கமிட்டி திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. இதனால், சர்வதேச மாணவர்களுக்கு மேலும் சிக்கல் உருவாகலாம் என கருதப்படுகிறது.
அதாவது, பிரித்தானியாவில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் போதுமான மதிப்பெண்கள் பெறாத நிலையில், அவர்களுக்கு அடுத்த கட்ட விசா மறுக்கப்படலாம் என்னும் நிலை உருவாகலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |