சுவிட்சர்லாந்தின் ஹொட்டல் துறைக்கு அதிக வருவாய் வர எந்த நாட்டவர்கள் காரணம் தெரியுமா?
வெளிநாட்டவர்களால் சுவிஸ் ஹொட்டல் துறை புத்துணர்ச்சி பெற்று வருகிறது.
விருந்தோம்பல் துறைக்கு கொரோனா பரவல் பலத்த அடியைக் கொடுத்த நிலையில், தற்போது மீண்டும் அது புத்துணர்ச்சி பெற்று வருகிறது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஹொட்டல்களில் இரவு நேரங்களிலும் தங்குவோர் எண்ணிக்கை 22 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக பெடரல் புள்ளிவிவரங்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கு அதிக அளவில் வருபவர்களில் முதலிடம் பிடிப்பவர்கள் ஜேர்மானியர்கள். இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர்கள் அமெரிக்க நாட்டவர்கள்.
அவர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் பிரான்ஸ் நாட்டவர்கள். அவர்களைத் தொடர்ந்து வருபவர்கள் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள்.
மேலும், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையும் சமீப காலமாக பெருமளவில் அதிகரித்துவருகிறது. இந்த ஆண்டு, 180,000 பேர் அமீரகத்திலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்து தங்கியிருக்கிறார்கள்.
இந்த எண்ணிக்கை வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.