இதற்குமேல் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்துக்கு வரவேண்டாம்... புலம்பெயர்தலுக்கெதிராக முடிவு செய்யவிருக்கும் மக்கள்
புலம்பெயர்தலுக்கெதிராக சுவிஸ் பொதுமக்கள் விரைவில் முக்கிய முடிவொன்றை எடுக்க உள்ளார்கள்.
புலம்பெயர்தலுக்கெதிராக 110,000 கையெழுத்துக்கள்
சுவிஸ் வலதுசாரிக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி (Swiss People’s party, SVP), இதற்குமேல் வெளிநாட்டவர்கள் சுவிட்சர்லாந்துக்கு வரவேண்டாம் என்று கூறும் பிரேரணை ஒன்றிற்கு ஆதரவாக 110,000 கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது.
ஒரு பிரேரணை வாக்கெடுப்புக்கு வரவேண்டுமானால், அதற்கு ஆதரவாக 10,000 பேர் கையெழுத்திட்டால் போதும் என்ற நிலையில், இந்த பிரேரணைக்கு ஆதரவாக, அக்கட்சி 110,000 கையெழுத்துக்களைப் பெற்றுள்ளது.
ஆகவே, அந்த பிரேரணை விரைவில் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவிஸ் மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
அதாவது, சுவிட்சர்லாந்துக்குள் தொடர்ந்து வெளிநாட்டவர்கள் வருவதை நிறுத்த சுவிஸ் மக்கள் கட்சி விரும்புகிறது. புலம்பெயர்ந்தோர் வருகையால் 2023இல் சுவிஸ் மக்கள்தொகை 9 மில்லியனைத் தாண்டிவிட்டதாக அக்கட்சி கூறுகிறது.
ஆகவே, அக்கட்சி முன்வைத்துள்ள பிரேரணை, 2050க்கு முன் சுவிஸ் மக்கள்தொகை 10 மில்லியனைவிட அதிகரிக்கக்கூடாது என்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |