வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு வாங்கத் தடை: விவரம் செய்திக்குள்
வெளிநாட்டவர்கள் கனடாவில் இரண்டு ஆண்டுகளுக்கு வீடு வாங்கத் தடை விதிக்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது.
கனடாவில் வீடுகள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பிரச்சினையைக் குறைக்கும் நடவடிக்கையாக, கனேடியர்களுக்கு உதவும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கனடாவில் இரண்டு ஆண்டுகளுக்கு வீடு வாங்க தடை விதிக்க இருப்பதாக கனடா அரசு நேற்று தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு கனடாவில் வீடு வாங்கத் தடையுடன், ஓராண்டுக்குள் தங்கள் வீட்டை விற்பவர்களுக்கு அதிக வரி விதிக்கப்பட இருப்பதாகவும் கனடா அரசு அறிவித்துள்ளது. ஆனாலும், அதிலும் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்களுக்கும், வெளிநாட்டு மாணவர்களுக்கும் பல விதிவிலக்குகளும் உள்ளன.
கடந்த ஆண்டு, வீட்டு விலைகள் 20 சதவிகிதத்திற்கும் அதிகம் உயர்ந்ததுடன், வீட்டு வாடகையும் கணிசமாக உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, சந்தையில் ஏற்பட்டுள்ள பரபரப்பைக் குறைக்க அரசுக்கு அழுத்தம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.