சுவிஸ் நகரமொன்றில் வீடு வாங்க போட்டி போடும் வெளிநாட்டவர்கள்: விளைவு
சுவிட்சர்லாந்திலேயே வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் இடம் என்னும் பெருமை, இடம் மாறியுள்ளது.
வீடு வாங்க போட்டி போடும் வெளிநாட்டவர்கள்
சூரிச் மாகாணத்திலுள்ள Küsnacht மற்றும் Zollikon சுவிட்சர்லாந்திலேயே வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் இடங்கள் என அழைக்கப்பட்டன.
தற்போது, வாழ்வதற்கு அதிக செலவு பிடிக்கும் இடம் என்னும் பெருமையை அந்த இடங்கள் இழந்துள்ளன.
அவை முன்பு தங்கக் கரை (Gold Coast) என்றே அழைக்கப்பட்ட நிலையில், தற்போது Kilchberg மற்றும் Thalwil என்னும் இடங்கள் அதிக விலைமதிப்புள்ளவையாகிவிட்டன.
அதற்கு முக்கியக் காரணம், வெளிநாட்டவர்கள், குறிப்பாக ஜேர்மானியர்கள் அங்கு வீடுகள் வாங்க போட்டிபோடுவதுதான்.
தற்போது Kilchberg மற்றும் Thalwil என்னும் இடங்களில் நிலத்தின் விலை, சதுர மீற்றர் ஒன்றிற்கு சுமார் 35,000 சுவிஸ் ஃப்ராங்குகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |