சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு தான் அதிக வேலையில்லாத் திண்டாட்டம்: அதிர்ச்சியளிக்கும் ஒரு ஆய்வு
சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள்தான் அதிக வேலையில்லாத்திண்டாட்டப் பிரச்சினையை சந்திப்பதாக சுவிஸ் பெடரல் புள்ளி விவர அலுவலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிஸ் நாட்டவர்களை விட வெளிநாட்டவர்கள் அதிக கல்வித் தகுதியுடையவர்களாக இருந்தும், இந்த நிலை காணப்படுவதுதான் வேதனை!
வெளிநாட்டவர்களில் 7 சதவிகிதத்தினர் வேலையில்லாத்திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது அந்த ஆய்வு. அதே நேரத்தில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டிராத சுவிஸ் குடிமக்களில் வெறும் 3 சதவிகிதத்தினர் மட்டுமே வேலையில்லாத்திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம்.
அத்துடன், வேலை கிடைக்காத முதல் தலைமுறை வெளிநாட்டவர்களில் 19 சதவிகிதத்தினர், அதிக கல்வித்தகுதி உடையவர்கள் என்கிறது, சுவிஸ் பெடரல் புள்ளிவிவர அலுவலகம். அதேபோல், வேலை கிடைக்காத இரண்டாம் தலைமுறை வெளிநாட்டவர்களில் 12 சதவிகிதத்தினர் அதிக கல்வித்தகுதி உடையவர்களாம்.
சுவிட்சர்லாந்தில் வாழிட உரிமம் பெற்றவர்களில், சுமார் 40 சதவிகிதத்தினர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.