சுவிட்சர்லாந்துக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோர் அங்கு எந்த மாகாணத்தில் அதிகம் வாழ்கிறார்கள்?
சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவர் என புள்ளிவிவரங்கள் கூறும் நிலையில், அவர்கள் சுவிட்சர்லாந்தில் எங்கு வாழ்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்வோமா?
இது குறித்து சுவிஸ் பெடரல் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள விவரங்கள்...
சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் 15 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் கொண்டவர்களில் 30.2 சதவிகிதத்தினர் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்கள் அல்ல!
கிட்டத்தட்ட எல்லா சுவிஸ் மாகாணங்களிலுமே வெளிநாடுகளில் பிறந்தவர்கள் வாழ்கிறார்கள் என்றாலும், பெரிய சுவிஸ் மாகாணங்களில் அவர்கள் அதிக அளவில் வாழ்கிறார்கள்.
சுவிட்சர்லாந்திலேயே பெரிய மாகாணமான சூரிச்சில் வாழ்பவர்களில் 439,000 பேர், அதாவது 34.5 சதவிகிதத்தினர் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.
Vaud மாகாணத்தில் வாழ்பவர்களில் 274,000 பேர், அதாவது, 41.5 சதவிகிதத்தினரும், Argauவில் வாழ்பவர்களில் 163,000 பேர், அதாவது, 28.6 சதவிகிதத்தினரும், ஜெனீவாவில் வாழ்பவர்களில் 143,000 பேர், அதாவது 50.8 சதவிகிதத்தினரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்தான்.
புலம்பெயர்ந்தோருக்கு சுவிட்சர்லாந்தில் பிறந்த பிள்ளைகள்
இந்த புள்ளிவிவரங்கள், எத்தனை பேர் இரண்டாம் தலைமுறையினர் என்பதையும் தெரிவிக்கின்றன. அதாவது, அவர்கள் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்கள் என்றாலும், அவர்களுடைய பெற்றோர் சுவிட்சர்லாந்தில் பிறந்தவர்கள் அல்ல!
சுவிஸ் மக்கள் தொகையில், வெளிநாட்டவர்களின் இரண்டாம் தலைமுறை சுவிஸ் பிள்ளைகள் 7.3 சதவிகிதம்.
அவர்களில் அதிகம் பேர் Ticinoவிலும் (12.2 சதவிகிதம்), ஜெனீவாவிலும் (11.7 சதவிகிதம்), Solothurnஇலும் (8.8 சதவிகிதம்) சூரிச்சிலும் (8.6 சதவிகிதம்) வாழ்கிறார்கள்.
புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்
வெளிநாடுகளில் பிறந்தவர்கள் மற்றும் இரண்டாம் தலைமுறை சுவிஸ் மக்களை எடுத்துக்கொண்டால், அவர்களில் வயதுவந்தவர்களில் 37.5 சதவிகிதத்தினர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்.
முதல் தலைமுறை புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, பெரிய சுவிஸ் நகரங்களில் அதிக அளவில் வெளிநாட்டவர்கள் அல்லது புலம்பெயர்தல் பின்னணி கொண்ட சுவிஸ் மக்கள் வாழ்கிறார்கள்.
ஜெனீவாவில் வாழ்பவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பகுதியினர் (62.4 சதவிகிதத்தினர்) புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள்தான். அதுவே Vaud, Ticino மற்றும் Baselஇல் 50 சதவிகிதம் பேர். சூரிச்சில் 548,000 பேர் (43 சதவிகிதத்தினர்) புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்கள் ஆவர்.