கனடாவில் வேலை தேடும் வெளிநாட்டவர்கள்: உண்மை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வீடியோ
ஒரு காலத்தில் வெளிநாட்டவர்கள் மற்றும் சர்வதேச மாணவர்களின் கனவு தேசமாக இருந்த கனடாவில் நிலையில் பெருமளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்னமும் வெளிநாட்டவர்களை வரவேற்பதற்காக கனடா புதிய திட்டங்கள் குறித்து அறிவித்துவரும் அதே நேரத்தில், விலைவாசி, வருவாய்க்கேற்ற வீடு கிடைக்காதது முதலான பல்வேறு காரணங்களால் புலம்பெயர்ந்தோர் பலர் அமைதியாக கனடாவை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கோ அல்லது தங்கள் தாய்நாட்டிற்கோ செல்வதைக் குறித்த செய்திகளும் மறுபக்கம் வெளியாகிவருவதை மறுப்பதற்கில்லை.
கனடாவில் வேலை தேடும் வெளிநாட்டவர்கள்
இந்நிலையில், சர்வதேச மாணவர்கள், பகுதி நேர வேலையாவது கிடைக்காதா என நிறுவனம் நிறுவனமாக ஏறி இறங்குவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சர்வதேச மாணவர்களைப் பொருத்தவரை தங்கள் அன்றாடகத் தேவைகளுக்கும் தங்கள் தாய்நாட்டிலிருக்கும் தங்கள் பெற்றோரையோ சார்ந்திருப்பதை தவிர்ப்பதற்காக பகுதி நேர வேலைகளைத் தேடிக்கொள்ளும் ஒரு நிலை கனடாவில் காணப்படுகிறது.
கனடாவில் கல்வி பயிலும் மாணவர்கள் வேலை தேடி அலைவதைக் காட்டும் சில காட்சிகளை வெளியிட்டுள்ளார்கள்.
அதில், Tim Horton என்னும் காபி ஷாப் மற்றும் உணவகத்தில் வேலை இருப்பதை அறிந்து அங்கு வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக சென்றுள்ளார்கள் சில மாணவர்கள்.
அங்கு சென்று பார்த்தால், ஏற்கனவே அங்கு நூற்றுக்கும் அதிகமான மாணவ மாணவிகள் வரிசையில் நிற்கிறார்கள்!
தான் கனடாவில் ஆறு மாதங்களாக பகுதி நேர வேலை ஒன்றைத் தேடி வருவதாகக் கூறும் இந்திய மாணவரான நிஷாத் (23) என்பவர், இதுவரை தனக்கு ஒரு பகுதி நேர வேலை கூட கிடைக்கவில்லை என்கிறார்.
இந்த நிறுவனத்தில் தனது CVயைக் கொடுத்துவிட்டு அடுத்த நிறுவனத்துக்கு புறப்படுகிறார் நிஷாத். அவரது அனுபவத்தையும், வெளியாகியுள்ள வீடியோக்களையும் பார்க்கும்போது, இதுதான் கனடாவில் வெளிநாட்டவர்கள், குறிப்பாக சர்வதேச மாணவர்களின் நிலை என்பது தெளிவாகப் புரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |