'மரடோனா மரணத்திற்கு 10 நாட்களுக்கு முன்' - 4 ஆண்டுகளுக்கு பின் வெளியான அதிர்ச்சி தகவல்
மரடோனா மரண தொடர்பில் தடயவியலாளர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மரடோனா
கால்பந்து விளையாட்டில் பெரும் ஜாம்பவானாக வலம் வந்த மரடோனாவிற்கு(Diego Maradona) உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.
இவர் அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவராக இருந்தபோது அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது.
போதை பழக்கத்திற்கு அடிமையான மரடோனா, கடந்த 2020 ஆம் ஆண்டு மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
அதன் பின்னர் சில வாரங்களிலே மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். மருத்துவர்களின் அலட்சியத்தாலே மரடோனா உயிரிழந்ததாக சர்ச்சை நிலவியது.
7 பேர் கொண்ட மரடோனாவின் மருத்துவக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
வேதனையுடன் மரணம்
இந்த வழக்கில் தடயவியல் நிபுணர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், "மரடோனாவின் இதயம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக, மரணிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு நுரையீரலில் நீர் சேர்ந்துள்ளது.
இதனால், அவர் கடுமையான வேதனையுடன் மரணத்தை எதிர்கொண்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இதை கவனித்திருக்க வேண்டும்.
மரடோனாவின் இதயம், சாதாரண இதயத்தை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு எடை அதிகரித்துள்ளது. அவரது வீடு சிகிச்சையளிப்பதற்கு ஏற்ற இடமில்லை" என தெரிவித்துள்ளார்.
இந்த செயல், நோயாளியின் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதை அறிந்திருந்தும், ஒரு நடவடிக்கையைப் பின்பற்றுவது என்ற குற்றத்தின் கீழ் வருகிறது.
இதில் மேலும் பலர் வாக்குமூலம் அளிக்க உள்ள நிலையில், குற்றச்சாட்டு உறுதியானால், அவர்களுக்கு 8 முதல் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் அபாயம் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |