20 வயதில் திருமணம்... ரூ 2 லட்சம் முதலீட்டில் நிறுவனம்: இன்று பெரும் பணக்கார பெண்களில் ஒருவர்
டெல்லியை சேர்ந்த மீரா குல்கர்னி பெரும் சவால்களை எதிர்கொண்ட பின்னர் தான் தற்போதைய நிலைக்கு உயர்ந்துள்ளார்.
நோக்கத்தையும் ஆறுதலையும்
20 வயதில் திருமணம் செய்துகொண்ட மீரா குல்கர்னி, மிக விரைவிலேயே தமது திருமணம் தோல்வியில் முடிய காரணம் மது என்பதை புரிந்துகொண்டார். துணிச்சலான முடிவை எடுத்த மீரா, தமது இரண்டு பிள்ளைகளுடன், கணவரை பிரிந்து பெற்றோரிடம் தஞ்சம் கோரினார்.
ஏனென்றால், தனக்கும் தன் இரண்டு குழந்தைகளுக்கும் சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால் துயரம் அவரை துரத்தியது. அவரது 28வது வயதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்தார்.
இனி தனித்தே இரு பிள்ளைகளையும் வளர்க்கும் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது. மெழுகுவர்த்திகள் மற்றும் கைவினை சோப்புகளை உருவாக்குவது 45 வயதான மீராவுக்கு ஒரு நோக்கத்தையும் ஆறுதலையும் அளித்தது, குறிப்பாக அவரது மகள் திருமணம் செய்துகொண்டு வெளியே சென்ற பிறகு.
இதையே தொழிலாக முன்னெடுக்க முடிவு செய்த மீரா, 2000 ஆண்டு Forest Essentials என்ற நிறுவனத்தை தொடங்கினார். வெறும் 2 ஊழியர்களுடன் ரூ 2 லட்சம் முதலீட்டில் Forest Essentials நிறுவனம் தொடங்கப்பட்டது.
சொத்து மதிப்பு ரூ 1,290 கோடி
ஆயுர்வேத பாரம்பரிய முறைப்படி தங்களது தயாரிப்புகளை உருவாக்க முயன்றார். தற்போது இந்தியா முழுக்க 130 அங்காடிகள் செயல்பட்டு வருகிறது. மட்டுமின்றி இவரது தயாரிப்புகளே தாஜ் மற்றும் ஹயாத் போன்ற புகழ்பெற்ற 190 ஹொட்டல்களில் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் 120 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. 2005ல் இவரது நிறுவனத்தின் வருவாய் என்பது ரூ 6 கோடி என இருந்தது. 2021ல் அது ரூ 254 கோடி என அதிகரித்தது. 2008ல் நியூயார்க்கில் செயல்படும் நிறுவனம் ஒன்று Forest Essentials-ன் 20 சதவிகித பங்குகளை வாங்கியது.
2021 அக்டோபர் மாதம் பிரித்தானியாவில் அங்காடிகளை திறந்த Forest Essentials, தற்போது 12 சில்லறை விற்பனை அங்காடிகளை செயல்படுத்தி வருகிறது.
Forest Essentials நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 8,300 கோடி என்றே கூறப்படுகிறது. மீரா குல்கர்னியின் மொத்த சொத்து மதிப்பு ரூ 1,290 கோடி என தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |