ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிவிட்டால்... ஐ லவ் யூ: பற்றியெரியும் காட்டுத்தீயுடன் போராடும் கனேடியரின் செய்தி
கனடாவில் பல இடங்களில் காட்டுத்தீ பற்றியெரியும் நிலையில், அதற்கு நடுவில், காட்டுத்தீயுடன் போராடும் ஒருவர் தன் மனைவிக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தி குறித்த நெகிழவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவில், ஆங்காங்கே காட்டுத்தீ பற்றியெரிந்து வருகின்றது. அதில், வடக்கு Saskatchewanஇல் அமைந்துள்ள Cigar Lake uranium mine என்னும் யுரேனிய சுரங்கத்தின் அருகில் தீப்பற்றி எரியும் நிலையில், அதை அணைக்க தன்னார்வலர்களான தீயணைப்பு வீரர்கள் போரடி வருகிறார்கள்.
சுரங்கத்திலிருந்து 80 அத்தியாவசிய பணியாளர்கள் தவிர 230 பேர் வெளியேற்றப்பட்டுவிட்டார்கள். சுரங்கப்பணிகள் நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், சுரங்கத்தை பாதுகாக்கும் முயற்சியில் 80 பேர் களத்திலிருக்கிறார்கள்.
இதற்கிடையில், அங்கு தன்னார்வலர் தீயணைப்பு வீரராக பணியாற்றும் Moriah Dyck என்பவரின் கணவர், தன் மனைவிக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். ஒருவேளை எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், ஒன்று மட்டும் உனக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், ஐ லவ் யூ, உன்னையும் நம் குழந்தையையும் நான் மிகவும் நேசிக்கிறேன், என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலில் Moriahவுடன் மொபைலில் பேசிக்கொண்டிருந்த அவரது கணவர், அவருக்கு மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து குறுஞ்செய்தில் இந்த செய்தியை அனுப்பியுள்ளார்.
இரவு திடீரென மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிவிட, அவ்வளவுதான், கணவர் இறந்துபோனார் என்ற முடிவுக்கே வந்திருக்கிறார் Moriah. ஆனால், மறுநாள் காலை எப்படியோ மொபைலை சார்ஜ் செய்து மீண்டும் அவரது கணவர் பேச, அப்போதுதான் உயிர் திரும்பவந்தது போல் இருந்திருக்கிறது Moriahவுக்கு. தங்கள் போராட்டம் தொடர்கிறது என்று கூறியிருக்கிறார் அவர்.
மாகாணத்தில் 19 இடங்களில் தீ எரிந்துகொண்டிருப்பதாகவும், அவற்றில் Cigar Lake Mineக்கு அருகிலுள்ள இடம் உட்பட ஐந்து இடங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ எரிவதாகவும் அந்த சுரங்கத்தைக் கட்டுப்படுத்தும் கனேடிய அணு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.