பிரான்சில் பற்றியெரிந்த காட்டுத்தீ: தீ வைத்ததாக கைது செய்யப்பட்டவர் யார் என தெரியவந்ததால் அதிர்ச்சி...
பிரான்சில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறக் காரணமாக அமைந்த காட்டுத்தீயை உருவாக்கியவர் ஒரு தீயணைப்பு வீரர் என தெரியவந்துள்ளதையடுத்து கடுமையான அதிர்ச்சி உருவாகியுள்ளது.
ஏற்கனவே மக்கள் வெப்பத்தால் அவதியுற்றுக்கொண்டிருந்த நிலையில், சென்ற வாரம் பல இடங்களில் பற்றிய காட்டுத்தீ காரணமாக ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டார்கள்.
ஆனால், அந்த காட்டுத்தீ தானாக உருவானதல்ல, ஒரு நபர் அந்த காட்டுத்தீயை உருவாக்கியுள்ளார் என்ற விடயம் தெரியவரவே மக்களிடையே அதிர்ச்சி உருவானது.
இதற்கிடையில், அந்த நபர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் யார் என தெரியவந்தபோது, மக்களுக்கு மட்டுமல்ல, தீயை அணைக்கப்போராடிய தீயணைப்புத்துறையினருக்கும் கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டது.
Image- france24.com
காரணம், அந்த தீயை உருவாக்கியவர் ஒரு தீயணைப்பு வீரர்.
Herault பகுதியைச் சேர்ந்த அந்த நபர் ஒரு தன்னார்வலர் தீயணைப்பு வீரராக பணி புரிவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஏதோ ஒரு உந்துதலில், தன்னைப் புறக்கணிக்கும் தன் குடும்பத்தார் முன் தன்னை நிரூபித்துக்காட்டுவதற்காக தான் தீவைத்ததாகவும், தான் தீவைப்பதற்கு அடிமைப்பட்டுவிட்டதாகவும் பல்வேறு காரணங்களைத் தெரிவித்துள்ளார் தனது 30 வயதுகளிலிருக்கும் அந்த நபர்.
கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு 15 ஆண்டுகள் சிறையும், 150,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்படலாம்.