UPI PINனை மறந்துவிட்டீர்களா? கவலை வேண்டாம், மாற்றுவதற்கான எளிய வழி இதோ
UPI பின்னை மறப்பது சில சமயங்களில் பிரச்சனையாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில் UPI பின்னை எப்படி மாற்றுவது? இதோ ஒரு எளிய முறை.
இந்தியாவின் நிதி அமைப்பில் UPI புதிய புரட்சியை உருவாக்கியுள்ளது. கையில் பணம் தேவையில்லாமல் நீங்கள் விரும்பியதை வாங்குவதற்கான சுதந்திரத்தை UPI வழங்குகிறது.
உங்கள் மொபைலில் UPI அப்ளிகேஷன் இருந்தால், பணப் பரிமாற்றம் மிகவும் எளிது. சிறிய தொகையாக இருந்தாலும் பாரிய தொகையாக இருந்தாலும், நாட்டின் எந்த மூலையிலிருந்தும் சில நொடிகளில் மாற்ற முடியும்.
இந்த எல்லா காரணங்களாலும், UPI பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதைக் காணலாம்.
UPI கட்டண முறையைப் பயன்படுத்த UPI பின் தேவை. இது UPI தனிப்பட்ட அடையாள எண் என்றும் அழைக்கப்படுகிறது.
UPI பதிவின் போது பயனர் அமைத்த தனிப்பட்ட குறியீடு இதுவாகும். ஆனால், உங்கள் UPI பின்னை மறந்துவிட்டால் அல்லது மாற்ற வேண்டியிருந்தால் என்ன செய்வது? அதை எப்படி செய்வது? என்ற சந்தேகம் இருக்கலாம். இதோ அதற்கு பதில்...
UPI பின்னை எப்படி மாற்றுவது?
*UPI சேவைகளை வழங்கும் mobile applicationஐ திறக்கவும்.
* முகப்புத் திரையில் profile விருப்பத்திற்குச் செல்லவும்.
*நீங்கள் UPI பின்னை மாற்ற விரும்பும் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
* Change UPI PIN அல்லது Reset UPI PIN என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
*உங்கள் ATM அல்லது debit card விவரங்கள் உட்பட தேவையான தகவல்களை வழங்கவும்.
*இந்த விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
*உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க OTP ஐ உள்ளிடவும்.
*தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கிற்கு புதிய நான்கு அல்லது ஆறு இலக்க UPI பின்னைத் தேர்ந்தெடுக்கவும்.
*புதிய பின்னை உறுதிப்படுத்தவும். இப்போது நீங்கள் அனைத்து செயல்முறைகளையும் முடித்துவிட்டீர்கள்.
Forgot UPI PIN, How You Change UPI PIN, how to Reset UPI PIN