ஹரி மேகனுக்கு எதிராக முறைப்படி விசாரணை... மகாராணியார் அதிரடி: பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக ஒரு நிகழ்வு
பிரித்தானிய வரலாற்றில் முதல் முறையாக ராஜ குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை ஒன்று துவக்கப்பட உள்ளது.
என்று பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு திருமணமாகி, மனைவியாக ஒரு அமெரிக்க முன்னாள் நடிகையை அரண்மனைக்குள் கொண்டுவந்தாரோ, அன்றே ஒரு புது நாடகம் துவங்கிவிட்டது.
ஹரியின் மனைவி மேகன் அரண்மனைக்குள் வந்ததுமே, தினமும் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுவந்தது அரண்மனை வட்டாரம்.
இணைபிரியாத சகோதரர்கள் என அழைக்கப்பட்ட வில்லியமும் ஹரியும் ஆளுக்கொரு பக்கம் திரும்பிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகின.
நேற்று வரை தொலைக்காட்சித் தொடர்களில் வேடம் கட்டி வந்த மேகன், இளவரசி என்ற நிலை வந்ததும் தலைகால் புரியாமல் ஆட ஆரம்பித்தார்.
உதவியாளர்களை அவர் கொடுமைப்படுத்துகிறார் என முதலில் செய்திகள் வெளியாகின, பின்னர் இரண்டு பேர் அரண்மனை வேலையையே உதறிவிட்டு வெளியேறினார்கள். தன் செல்லப்பேரனுக்காக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு பொறுத்துக்கொண்டிருந்தார் மகாராணியார்.
பின்னர், அரண்மனையுடன் ஒத்துப்போக இயலாமல், தன்னை எல்லோரும் ஒதுக்குவதாக கூறி இளவரசனாக வாழவேண்டிய ஒருவரை இழுத்துக்கொண்டு அரணமனையை விட்டே வெளியேறினார் மேகன்.
மனவேதனையையும் சகித்துக்கொண்டு அப்போதும் தம்பதியரை மனதார வாழ்த்தி அனுப்பினார் மகாராணியார்! ஆனால், அதற்குப் பிறகும் மேகனின் தொல்லை அடங்கியபாடில்லை.
அரண்மனையை விட்டு வெளியேற்ய பின்னரும், தன்னை ஒதுக்கிவைத்ததாகவும், தனக்கு களங்கம் ஏற்படும் வகையில் செய்திகளை பரப்புவதாகவும் கூறிவந்தார் மேகன், ஹரியும் மனைவி சொன்னதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டே இருந்தார். இந்த சூழ்நிலையில்தான், ஹரியும் மேகனும் அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் ஓபரா வின்ஃப்ரேக்காக பேட்டி ஒன்றை அளித்தார்கள்.
அது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற, அரண்மனையில் இருக்கும்போதே ராஜ குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்திய மேகன், இப்போது பேட்டியில் என்னவெல்லாம் சொல்லியிருப்பாரோ என்ற எண்ணம் அரண்மனையில் கவலையை ஏற்படுத்தியது.
இந்த நேரத்தில், மேகன் தன் உதவியாளர்களாக பணியாற்றிய அரண்மனை ஊழியர்களை மோசமாக நடத்தியதாக தி டைம்ஸ் பத்திரிகையில் புகார் தெரிவித்தார், ஹரி மேகனின் முன்னாள் உதவியாளரான அமெரிக்கரான Jason Knauf என்பவர்.
ஹரியும் மேகனும் தங்கள் உதவியாளர்களை மனோரீதியாக கொடுமைப்படுத்தியதாகவும், அவர்களை துரத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹரியும் மேகனும் அராஜகமான முறையில் வம்பு செய்பவர்கள், அவர்களால் பாதிக்கப்பட்ட உதவியாளர்கள், அவமானமாக உணர்ந்ததாகவும், திகிலடைந்ததாகவும், பயத்தில் நடுங்கியதாகவும், மேகன் முன் கண்ணீர் விட்டதாகவும் கடுமையான புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக, ஹரி மேகன் மீது முறைப்படியான விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டுள்ளார் மகாராணியார். மகாராணியாரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து விசாரணைக்கு ஒத்துழைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஹரி மேகனின் முன்னாள் உதவியாளர், தி டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ள புகாரை தாங்கள் சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளதாக அரண்மனை வட்டாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



