சீனாவுக்காக உளவு பார்த்ததாக ஜேர்மனியில் ஐந்து பேர் கைது
சீனாவுக்காக உளவு பார்த்ததாக, ஜேர்மனியில் வலதுசாரி அரசியல்வாதி ஒருவரின் உதவியாளர் ஒருவர் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
உளவு பார்த்ததாக ஜேர்மனியில் ஐந்து பேர் கைது
நேற்று செவ்வாய்க்கிழமை, ஜேர்மனியின் ஃபெடரல் விசாரணை அதிகாரியின் அலுவலகம், AfD கட்சி அரசியல்வாதியான Maximilian Krah என்பவரின் முன்னாள் உதவியாளர் ஒருவர் மீதும், சீனக் குடிமகன் ஒருவர் மீதும், சீன உளவுத்துறைக்காக வேலை பார்த்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளது.
Carsten Koall/dpa/picture alliance
மேலும், Düsseldorf நகரிலும், Bad Homburg நகரிலும் சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின்பேரில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் இருவர் ஆண்கள், ஒருவர் பெண். அவர்கள் அனைவரும் தற்போது காவலில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |