துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு ஆடைகள் களையப்பட்டு தாக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர்! நடந்தது என்ன?
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டுவர்ட் மெக்கைல் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பமான நிகழ்வு குறித்து மனம் திறந்துள்ளார்.
ஷேன் வார்னே அவுஸ்திரேலிய அணியில் இருந்த காலத்திலேயே, அவருக்கு கடும் போட்டி அளித்தவர் ஸ்டுவர்ட் மெக்கைல். இந்த நிலையில், கடந்த ஆண்டு ஸ்டுவர்ட் மெக்கைல், சிட்னி புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது 2 இளைஞர்கள் வழிமறைத்து மெக்கைலுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது மெக்கைலை துப்பாக்கியை காட்டி மிரட்டி காரில் ஏற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து 2 இளைஞர்களும், மெக்கைலின் ஆடையை கழற்றி நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
AFP
மெக்கைலை ஆடையில்லாமல் போட்டு அடித்து தாக்கிவிட்டு, சுமார் ஒன்றை மணி நேரம் காரில் சுற்றிவிட்டு வேறு ஏதோ இடத்தில் மெக்கைலை தூக்கி வீசியுள்ளனர்.
இது குறித்து தற்போது பேசிய மெக்கைல், என் வாழ்நாளில் மோசமான ஒன்றரை மணி நேரம் என்றால் அது தான். இந்த சம்பவத்துக்கு பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது நான் தான் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டு போதை பொருள் விற்றதாக என்னை அடித்தவர்கள் பொலிசில் கூறினர்.
ஆனால் விசாரணையில் என் மீது தவறு இல்லை என்று தெரியவந்தது என கூறியுள்ளார்.