ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட நடிகையிடம் பண மோசடி
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமொன்றில் நடித்து புகழ் பெற்றவரான பிரபல சுவிஸ் நடிகை பண மோசடிக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட நடிகையிடம் பண மோசடி
Movie Maker Magazine
பிரபலங்கள் சிலருடைய நிதி ஆலோசகராக பணியாற்றியவர் எரிக் ஃப்ரேமோண்ட் (Eric Freymond) என்னும் நபர்.
MSN
இந்த எரிக், பிரபல பிரெஞ்சுக் கோடீஸ்வரரான நிக்கோலஸ் (Nicolas Puech) என்பவரிடம் ஏற்கனவே பண மோசடியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
MSN
இந்நிலையில், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான Dr. No என்னும் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற பிரபல சுவிஸ் நடிகையான உர்சுலா (Ursula Andress, 89), தனது வங்கிக்கணக்கிலிருந்து 18 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மாயமாகியுள்ளதாக பொலிசில் புகாரளித்துள்ளார்.
The Irish Sun
இந்த பண மோசடியின் பின்னாலும் எரிக்தான் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
தான் நம்பிக்கை வைத்த ஒருவரே தன்னை ஏமாற்றியுள்ளதால் தனக்கு துரோகம் இழைக்கப்பட்டதுபோல் உணர்வதாக தெரிவித்துள்ளார் உர்சுலா.
உர்சுலாவின் புகாரின் பேரில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், ஆறு மாதங்களுக்கு முன், அதாவது, கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி, எரிக் ரயில் மோதி உயிரிழந்துவிட்டார். அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக பொலிசார் கருதுகிறார்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |