மூக்கை உடைத்துக்கொண்ட கைலியன் எம்பாப்பே: முன்னாள் குத்துச்சண்டை வீரரின் எச்சரிக்கை
ஆஸ்திரியா அணிக்கு எதிரான யூரோ கிண்ணம் போட்டியின் போது மூக்கில் காயம்பட்ட கைலியன் எம்பாப்பேவை முன்னாள் குத்துச்சண்டை வீரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
எம்பாப்பே மூக்கில் காயம்பட்டு
ஜேர்மனியில் யூரோ கிண்ணம் 2024 போட்டிகளின் முதல் சுற்று நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரியா அணியுடன் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கைலியன் எம்பாப்பே மூக்கில் காயம்பட்டு இரத்தவெள்ளத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இதனிடையே முன்னாள் குத்துச்சண்டை வீரர் Jero Garcia தமது அனுபவத்தை குறிப்பிட்டு எம்பாப்பேவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் இது சிக்கலான விடயம் என்றே தெரியவருகிறது என குறிப்பிட்டுள்ள Jero Garcia,
அடுத்த சில நாட்கள் அவரது மூக்கு அடைத்தே இருக்கும் என்றும், குணமடைவது கொஞ்சம் சிக்கலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழலில் எம்பாப்பே குழு போட்டிகளில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை கட்டாயம்
ஆனால் ஜூலை தொடக்கத்தில் முக்கியமான போட்டிகளில் அவர் ஆடவேண்டிய கட்டாயம் உள்ளது. குழு போட்டிகளில் இருந்து எம்பாப்பே விலகியுள்ளதால், ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள Jero Garcia, சில நாட்கள் மூச்சுவிடவும் சிரமாக இருக்கும் என்றார்.
குத்துச்சண்டையின் போது 15 முறை மூக்கில் காயங்களுடன் வெளியேறியதாக கூறும் Jero Garcia, மூச்சுவிட சிரமம் நீடிக்கும் என்றால், அறுவை சிகிச்சை கட்டாயம் என்றார்.
ஆனால் எம்பாப்பேவின் நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், அறுவை சிகிச்சை தொடர்பில் முடிவெடுக்கவில்லை என்றும் பிரான்ஸ் அணியின் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |